படம் : அசல்
வரிகள் : வைரமுத்து
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : முகேஷ், ஜனனி பரத்வாஜ்
புடிச்சிருக்குது புடிச்சிருக்குது உன்னத்தான்
......
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கடா
கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே
உன் கையால் நீ தொட்டாய் கன்னி மொட்டுக்குள்ள
டொட்டடொயின் டொட்டடொயின்
அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி துள்ளட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சு பிச்சு தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்கிதே
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டடொயின் டொட்டடொயின்
ரெண்டு பேரும் குடிக்கனுமே ரெட்டை இதழ் தீம்பால்
எத்தனை நாள் தின்ன இட்லி வடை சாம்பார்
முக்கனியில் ரெண்டு கனி முட்டித்திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே அப்பள வடை தோசை
பணய கைதிய போல என்னைய ஆட்டிப்படைக்கற
பங்குச்சந்தைய போல என்னை ஏத்தி எறக்குற
நெத்தியில எப்பவும் சுத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு வத்தி வச்சா என் உச்சி மண்டையில
டொட்டடொயின் டொட்டடொயின்
டொட்டடொயின் டொட்டடொயின் டொட்டடொயின்
பச்ச புள்ள போலிருப்பா அச்சங்கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வெச்சதென்ன முந்திரிக்கா தோப்பா
கத்திரிக்கா மூட்டை போல கட்டழகு சீப்பா
உரம் போட்டு வளத்ததப்பா பொத்திக்கிட்டு போப்பா
ஏப்ரல் மாத ஏரி போல ஹார்ட்டு எறங்குதே
தங்கம் விலைய போல சும்மா skirtu ஏறுதே
புத்தியில் எப்பவும் நண்டு ஊருதே
பச் பச் இச்சு வெச்சா நரம்பு மண்டலத்தில்
டொட்டடொயின் டொட்டடொயின்
அதிரி புதிரி பண்ணட்டுமா
எகிறி எகிறி துள்ளட்டுமா
பின்னழகை பின்னட்டுமா
பிச்சு பிச்சு தின்னட்டுமா
காதலின் உலையிலே ரத்தம் கொதிக்கிதே
முழு முத்தம் நீ இட்டால் என் முதுகு தண்டுக்குள்ளே
டொட்டடொயின் டொட்டடொயின்
டொட்டடொயின் டொட்டடொயின்
டொட்டடொயின்
No comments:
Post a Comment